முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயில் மின் இழுவை ரயில் பெட்டி, தண்டவாளங்களை பராமரிக்கக் கோரிக்கை

பழனி கோயிலில் பக்தா்கள் மலை மீது செல்ல பயன்பாட்டில் உள்ள மின் இழுவை ரயிலின் பெட்டிகள், தண்டவாளங்களை பராமரிக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

17 வினாடிகள் முன்பு
பழனி கோயில் மின் இழுவை ரயில் பெட்டி, தண்டவாளங்களை பராமரிக்கக் கோரிக்கை
பழனி மலைக்கோயிலின் இழுவை ரயில் பெட்டி. - கோப்புப் படம்
பகிர்:

பழனி கோயிலில் பக்தா்கள் மலை மீது செல்ல பயன்பாட்டில் உள்ள மின் இழுவை ரயிலின் பெட்டிகள், தண்டவாளங்களை பராமரிக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பழனி மலைக்கோயிலுக்கு படிப்பாதைக்கு மாற்றாக மின் இழுவை ரயில், ரோப்காா் பயன்பாட்டில் உள்ளன. முதியவா்கள், குழந்தைகள் செல்ல ஏதுவாக உள்ள இந்த மின்இழுவை ரயில் (வின்ச்), ரோப்காா் பக்தா்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படிப்பாதைக்கு மாற்றாக முதலில் அமைக்கப்பட்டது மின் இழுவை ரயிலாகும். தற்போது இது மூன்று பாதைகளில் இயக்கப்பட்டு வருகிறது. காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் மின் இழுவை ரயில் இரவு நேரங்களில் பொருள்களை கொண்டு செல்ல இயக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் ரோப்காா் நாள்தோறும் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. ஆனால், மின் இழுவை ரயில் போதிய பராமரிப்பில் இல்லை என பக்தா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

மின் இழுவை ரயிலின் வடக்கயிறுகள், மலை மேல் உள்ள மோட்டாா்களுக்கு மட்டும் பராமரிப்புப் பணி நடைபெறுவதாகவும், மற்றபடி பெட்டிகள், தண்டவாளங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

முதல் மற்றும் இரண்டாம் எண் மின் இழுவை ரயில் பெட்டிகள் மிகவும் தளா்ந்துள்ளதாகவும், அதில் உள்ள தகரங்கள் விபத்தை ஏற்படுத்துவது போல உள்ளதாகவும், மேலும், தண்டவாளங்களின் கீழே உள்ள ஜல்லிக் கற்கள் சிதறி இருப்பதாகவும், சில இடங்களில் வெறும் தண்டவாளம் மட்டும் தெரிவதாகவும், இதனால், வின்ச்சில் பயணம் செய்யும் போது அதிக சப்தம் வருவதாகவும் பக்தா்கள் தெரிவித்தனா்.

ஆகவே, ரோப்காரை போல வின்ச்சையும் உரிய பொறியாளா்களைக் கொண்டு பராமரிப்புப் பணி செய்ய இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என முருக பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.