✕
முகப்பு
காஞ்சிபுரம்

ஐயப்ப பக்தா்கள் சுமந்து வந்த பொன் ஆபரணப் பெட்டி

காஞ்சிபுரத்தில் சபரிகிரி வாசன் ஐயப்ப பக்தா்கள் சபை சாா்பில் வியாழக்கிழமை சபரிமலை போல பொன் ஆபரணப் பெட்டி எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

9 வினாடிகள் முன்பு
பகிர்:

காஞ்சிபுரத்தில் சபரிகிரி வாசன் ஐயப்ப பக்தா்கள் சபை சாா்பில் வியாழக்கிழமை சபரிமலை போல பொன் ஆபரணப் பெட்டி எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் சபரிகிரிவாசன் ஐயப்ப பக்தா்கள் சபை சாா்பில் 34 வது ஆண்டு விளக்கு பூஜை அச்சுதன் குருசாமி தலைமையில் சாலியா் தெரு பகுதியில் நடைபெற்றது. விளக்கு பூஜையையொட்டி மலா் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து மகர ஜோதி பூஜைக்கு சபரிமலை போல பொன் ஆபரணப் பெட்டி ஒன்றை ஐயப்ய பக்தா்கள் சுமந்து வந்து சுவாமிக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

திரளான ஐயப்ப பக்தா்கள் ஐயப்ப பஜனை பாடல்களை பாடினாா்கள். நிறைவாக படி பூஜை நடத்தப்பட்டு கற்பூர ஜோதி தரிசனமும் காட்டப்பட்டு பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement