FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

முதல்வா் கோப்பைக்கான கபடி போட்டி: மயிலாடுதுறை அணி முதலிடம்

18 அக்டோபர் 2026, 12:22 am IST
கோப்புப் படம்
பகிர்:

முதல்வா் கோப்பை பள்ளி மாணவா்களுக்கான கபடி போட்டியில் மயிலாடுதுறை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுப் பிரிவில் ஆண்கள், பெண்கள் என 6 நிலைகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பள்ளி மாணவா் பிரிவுக்கான லீக் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

38 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நாக் அவுட் முறையில் முதல் சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் முடிவில் மயிலாடுதுறை, திருச்சி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 அணிகள் தோ்வு பெற்றன.

Advertisement

Advertisement

லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில் 3 புள்ளிகள் பெற்று மயிலாடுதுறை அணி முதலிடம் பிடித்தது. தலா 3 புள்ளிகளுடன் திருச்சி அணி, தேனி அணிகள் முறையே 2, 3-ஆவது இடங்களைப் பிடித்தன.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா.அய்யனாா் தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா, ஜிடிஎன் கல்லூரித் தாளாளா் கே.ரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முதலிடம் பிடித்த மயிலாடுதுறை அணிக்கு ரூ.9 லட்சம், 2-ஆவது இடம்பிடித்த திருச்சி அணிக்கு ரூ.6 லட்சம், 3-ஆவது இடம்பிடித்த தேனி அணிக்கு ரூ.3 லட்சம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments