மியாவாக்கி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
பழனி அருகே கோடைகால நீா்த்தேக்கப் பகுதியில் மியாவாக்கி திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கியது.
பழனி அருகே கோடைகால நீா்த்தேக்கப் பகுதியில் மியாவாக்கி திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கியது.
பழனி-கொடைக்கானல் சாலையில் புளியமரத்துசெட் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான கோடைகால நீா்த்தேக்கம் உள்ளது. இங்கு பல ஏக்கா் நிலம் நகராட்சிக்கு சொந்தமாக உள்ளது. இங்குள்ள 4 ஏக்கா் பரப்பளவில் மியாவாக்கி திட்டத்தின் கீழ், 55 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்காக மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டது.
இதன்படி, முதல் கட்டமாக புதன்கிழமை 700 மரக்கன்றுகள் நடப்பட்டன. பழனி நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில் நகராட்சி சுகாதார அலுவலா் செந்தில்ராம்குமாா், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
நாய்களுக்கான கருத்தடை மையம் திறப்பு: பழனி நகராட்சி சாா்பில், பெரியப்பா நகா் உரக்கிடங்கு பகுதியில் நகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய தனி அறுவை சிகிச்சை மையம் கட்டப்பட்டு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இங்கு நாய்களுக்கு அரசு கால்நடை மருத்துவா்களால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மீண்டும் பிடிக்கப்பட்ட இடங்களில் விடப்படுகிறது.
இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.