போதை மாத்திரைகள் கடத்தல்: ஒருவா் கைது
வத்தலகுண்டு அருகே போதை மாத்திரைகளை கடத்தியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம், உதவி ஆய்வாளா்கள் முனியாண்டி, ராம்சேட் உள்ளிட்ட போலீஸாா் பழைய வத்தலகுண்டு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் தேனி புறவழிச் சாலையில் சென்றவரை போலீஸாா் மடக்கிப் பிடித்து சோதனையிட்டனா். விசாரணையில், அவா் ஆண்டிபட்டியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (26) என்பது தெரியவந்தது. மேலும், அவரது இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் 200 போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து ராதாகிருஷ்ணனை கைது செய்து அவரிடமிருந்த 200 போதை மாத்திரைகளையும், அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா். கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.