பேருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய கோரும் மனுவை பரிசீலிக்க உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் தரத்தை ஆய்வு செய்யக்கோரும் மனுவை போக்குவரத்து துறைச் செயலர் பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் தரத்தை ஆய்வு செய்யக்கோரும் மனுவை போக்குவரத்து துறைச் செயலர் பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த வழக்குரைஞர் புகழ்காந்தி தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான அரசுப் பேருந்துகளின் இருக்கைகள், மேற்கூரை சேதமடைந்த நிலையில் பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பேருந்தின் ஓட்டுநர்களும், பயணிகளும் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் நிலை குறித்து எம்.பி, எம்.எல் ஏக்கள் முன்னிலையில் ஆய்வு செய்யக்கோரி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 28 இல் மனு அனுப்பினேன். நடவடிக்கை இல்லை.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்யவும், தரமற்ற பேருந்துகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில போக்குவரத்துத்துறை செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.