FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும் அரசு ஆணை வெளியிடக் கோரியும், வேலைநிறுத்த காலத்தை முறைபடுத்தி சம்பளம் வழங்கக் கோரியும், வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும் அரசு ஆணை வெளியிடக் கோரியும், வேலைநிறுத்த காலத்தை முறைபடுத்தி சம்பளம் வழங்கக் கோரியும், வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிராம உதவியாளர் சங்க வட்டக் கிளை தலைவர் கருப்பையா தலைமை வகித்தார்.

      அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் வேல்மயில் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார். கிராம உதவியாளர் சங்க மாநிலச் செயலர் வளர்மதி, வருவாய்த் துறை அலுவலர் சங்க நிர்வாகி ரங்கலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

  கிராம உதவியாளர் சங்க செயலர் முருகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments