"மாநகராட்சி வரிவசூல் மையம் விடுமுறையிலும் செயல்படும்'
மதுரை மாநகராட்சி வரிவசூல் மையம் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி வரிவசூல் மையம் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு விவரம்: மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்புக் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. வரி செலுத்தாத இனங்களுக்கு குழாய் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இம்மாதிரியான நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு வசதியாக 2016 மார்ச் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாள்களிலும் கணினி வரிவசூல் மையம் வழக்கம்போல செயல்படும்.
பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி, வரிகளைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.