மதுரையில் "தினமணி' சார்பில் விநாயகர் சதுர்த்தி ஓவியப் போட்டிகள்
மதுரையில் வியாழக்கிழமை தினமணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.
மதுரையில் வியாழக்கிழமை தினமணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.
சிம்மக்கல்லில் உள்ள ஸ்ரீசாரதா வித்யாவனம் பெண்கள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டிகளில் ஏராளமான பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றனர். விநாயகர் உருவங்களை விதவிதமான வண்ணத்தில் வரைந்த குழந்தைகளில் 5 பேருக்கு சிறப்புப் பரிசுகளும், பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றுகளும் வழங்கப்பட்டன. மேலும் மூளைத் திறன் மேம்பாட்டு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. அதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று பரிசுகளைப் பெற்றனர். பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் சிந்தாமணி தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.