உசிலம்பட்டி பகுதியில் ஆகஸ்ட் 10 மின்தடை
உசிலம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உசிலம்பட்டி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான செயற் பொறியாளர் என்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உசிலம்பட்டி, இடையப்பட்டி மற்றும் ,தும்மக்குண்டு ஆகிய துணை மின்நிலையங்களில் ஆகஸ்ட் 10ம் தேதி வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை உசிலம்பட்டி நகர், தொட்டப்பநாயக்கனூர், நக்கலப்பட்டி, மேக்கிலார்பட்டி, கீரிப்பட்டி, பாப்பாபட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வேப்பனூத்து, புதிப்புரம், வடுகபட்டி, போத்தம்பட்டி, விக்கிரமங்கலம், முதலைக்குளம், நரியம்பட்டி, கொடிக்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.