திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி, திருநெல்வேலி-மங்களூரு இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஓணம், வேளாங்கண்ணி திருவிழாக்களை முன்னிட்டு திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
ஓணம், வேளாங்கண்ணி திருவிழாக்களை முன்னிட்டு திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓணம், வேளாங்கண்ணி திருவிழாக்களை முன்னிட்டு மதுரை வழியாக திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆகிய இரு நாள்கள் திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி(எண்.06046) சிறப்புக் கட்டண ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும். இதேபோல ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 6 ஆம் தேதி ஆகிய இரு நாள்கள் வேளாங்கண்ணி-திருவனந்தபுரம்(எண்.06045) சிறப்புக் கட்டண ரயில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 10.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 12.15 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும்.
இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இரண்டு, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மூன்று, படுக்கை வசதி கொண்டு பெட்டிகள் 11, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இரண்டு, சரக்குப் பெட்டிகள் இரண்டு அடங்கிய இந்த ரயில் குளித்துறை, இரணியல், நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
இதேபோல திருநெல்வேலி-மங்களூர் இடையே சிறப்பு ரயில்களை இயக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 5.55 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி-மங்களூர் (எண்.06019) சிறப்பு ரயில் மறுநாள் பகல் 12.30 மணிக்கு மங்களூர் சென்றடையும். மங்களூர்-திருநெல்வேலி (எண்.06020) சிறப்பு ரயில் மங்களூரில் இருந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி பகல் 3.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.
இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் ஒன்று, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மூன்று, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 9, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 6 அடங்கிய இந்த ரயில் நாகர்கோவில், குளித்துறை, நெய்யத்தின்கரா, திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், சொர்னூர், கோழிக்கோடு, வடகரை தலச்சேரி, கண்ணூர் மற்றும் காசர்கோடு வழியாக இயக்கப்படும். இந்த இரு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை(ஆக.8) முதல் தொடங்கியுள்ளது என அறிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.