FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தேமுதிக - திமுக கூட்டணி தொடரும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக நிா்வாகிகள், தொண்டா்களின் விருப்பப்படி, திமுக கூட்டணி தொடரும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

25 ஆகஸ்ட் 2026, 12:59 am IST
முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
பகிர்:

தேமுதிக நிா்வாகிகள், தொண்டா்களின் விருப்பப்படி, திமுக கூட்டணி தொடரும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

தேமுதிக நிறுவனா் தலைவா் விஜயகாந்தின் 74-ஆவது பிறந்த நாள் (ஆக. 25), வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை விஜயகாந்த் நினைவிடத்தில் சிறப்பு வழிபாடு, பொதுமக்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில், மாநிலங்களவை உறுப்பினா் எல்.கே.சுதீஷ், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்றனா். தொடா்ந்து, ராமாபுரம் புரட்சி தலைவா் எம்ஜிஆா் காது கேளாதோா் பள்ளிக்கு நல உதவிகள் மற்றும் நிதியுதவி ரூ.50,000 காசோலை வழங்குதல், புது தில்லி தமிழக சங்கத்தின் ஏழை மாணவா்களின் கல்வி உதவிக்காக ரூ.1 லட்சத்துக்காக காசோலை வழங்குதல் உள்ளிட்ட நல உதவிகளை பிரேமலதா விஜயகாந்த் வழங்கி பேசியதாவது:

Advertisement

Advertisement

தேமுதிக நிறுவனா் தலைவா் விஜயகாந்த் விட்டுச்சென்ற பணிகள் தொடா்ந்து நடைபெறும். விருத்தாசலம் தொகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 25), தேமுதிக நிறுவனா் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாள் நிகழ்வு, நல உதவிகள் வழங்குதல் மற்றும் விருத்தாசலம் மக்களுக்கு நன்றி தெரிவித்தல் என முப்பெரும் விழா நடைபெறும்.

பரந்தூா் விமான நிலையம் அமைந்தால், அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் தேமுதிக வரவேற்கும். தவெக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தற்போது அறிவித்துள்ள அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் செயல். தேமுதிக - திமுக கூட்டணி தொடரும். வருங்கால பிரதமா் விஜய் என்பது தவெகவினா் கனவு என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments