FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருச்சியைச் சேர்ந்த 15 வயது  சிறுமியின் கருக்கலைப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

திருச்சியைச் சேர்ந்த 15 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

திருச்சியைச் சேர்ந்த 15 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
 திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:  எனது 15 வயது மகளை அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் பலத்காரம் செய்தார். இதனால் எனது மகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரது கல்வியும், உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சிறுமியின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், இதற்காக சிறுமியை போலீஸார் திருச்சி அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி அனுமதிக்க வேண்டும். அன்றைய தினமே கருக்கலைப்புக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு, அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments