FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்கும் வகையில் உணவகங்களுக்கு துணிப்பை, பரிசுக்கூப்பன்

மதுரை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தினக் கொடியேற்ற நிகழ்ச்சியில் நகரில் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்கும்

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

மதுரை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தினக் கொடியேற்ற நிகழ்ச்சியில் நகரில் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்கும் வகையில் உணவகங்களுக்கு துணிப்பைகள் மற்றும் பரிசுக்கூப்பன்களை ஆணையர் அனீஷ்சேகர் புதன்கிழமை வழங்கினார்.
 மதுரை மாநகராட்சி வளாகத்தில் 72 வது சுதந்திர தின விழா புதன்கிழமை  நடைபெற்றது. தேசியக்கொடியை ஆணையர் அனீஷ்சேகர் ஏற்றி வைத்தார். பின்னர் மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேசியக் கொடியுடன் நடனம், பிளாஸ்டிக் தீமையை விளக்கும் நாடகம் என கலை நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டிருந்தன. 
மாநகராட்சிப் பகுதிகளில் ஏற்கெனவே பிளாஸ்டிக் பொருள்களைத் தடைசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பிரபல உணவகங்களுக்கு துணிப்பைகளை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் வழங்கினார். மேலும், துணிப்பை, பாத்திரங்களில் உணவுப் பொருள் வாங்கும் பொதுமக்களுக்கான பரிசுக்குரிய கூப்பன்களையும் அவர் உணவக உரிமையாளர்களிடம் வழங்கினார்.
     அமெரிக்கன் இந்தியன் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நவீன கல்வி முறை நிதி சார்ந்த எழுத்தறிவுத் திட்டம் சார்பில் நடந்த போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி ஆணையர் பாராட்டினார்.
 சிறந்த பணிக்காக மாவட்ட சுதந்திர தின விழாவில் சான்றிதழ் பரிசு பெற்ற மண்டலம் 2 (வடக்கு) உதவி ஆணையர் பழனிச்சாமியை பாராட்டினார். 
 சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி வளாக முன்பகுதி அலங்கரிக்கப்பட்டிருந்தது. செயற்கை நீரூற்றும் செயல்பட்டது.   விழாவில் பங்கேற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, உணவு பரிமாறப்பட்டன.
 விழாவில் மருத்துவர் அ.தீபிகாமோகன், மாநகராட்சி துணை ஆணையர் ப.மணிவண்ணன், நகர்நல அலுவலர் சதீஷ்ராகவன், நகரமைப்பு அலுவலர் ஐ.ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் பழனிச்சாமி, பிரேம்குமார் (தெற்கு),  வருவாய் பிரிவு ஆ.ரெங்கராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் என்.சித்திரவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments