தற்கொலை செய்த கூலித்தொழிலாளி எழுதிய கடிதத்தால் பரபரப்பு
மதுரை மேலமடைப் பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட கூலித் தொழிலாளி கடிதத்தால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மேலமடைப் பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட கூலித் தொழிலாளி கடிதத்தால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மேலமடை வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் முருகன் (40). கூலித்தொழிலாளி. முருகனுக்கும் அவரது சகோதரி தரப்பினருக்கும், எம்.கே.புரம் பகுதியில் உள்ள சொத்து தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அவரது தாய் லட்சுமி, தங்கை தமிழ்ச்செல்வி, அவரது மகன் விக்னேஷ், சகோதரர் சர்வேஸ்வரன் உள்ளிட்டோர் முருகனைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸில் முருகனுக்கு எதிராக அவரது தாய் தரப்பினர் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல் சார்பு ஆய்வாளர் முருகலட்சுமி விசாரித்துள்ளார்.
இந்நிலையில், மேலமடையில் உள்ள வீட்டில் முருகன் தூக்கிட்டு புதன்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், அவர் எழுதிய கடிதத்தையும் அண்ணாநகர் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் பெண் சார்பு ஆய்வாளர் தம்மைத் தாக்கியதாகவும், சகோதரி தரப்புக்கு அவர் சாதகமாக நடந்துகொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணைநடத்திவருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.