FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பழங்குடியினர் சான்று விவகாரம்: உசிலை.யில் பொதுமக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே  பழங்குடியினர் சான்றிதழ் வழங்கக்கோரி  அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள்

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

உசிலம்பட்டி அருகே  பழங்குடியினர் சான்றிதழ் வழங்கக்கோரி  அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள வடுகபட்டியில் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் தங்களுக்கு பழங்குடியினர் (டி .என்.டி ) சான்றிதழ் வழங்கக்கோரி  திங்கள்கிழமையிலிருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். புதன்கிழமை உரிய அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தக்கூடாது என  உத்தரவிட்ட உசிலம்பட்டி போலீஸாரைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் ஆதிசேடன், தவமணிதேவி, தமிழ்செல்வி, அன்பரசன், தவம், ஆகிய 5 பேரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 
   இதைக் கண்டித்து வடுகபட்டி கிராம மக்கள் மற்றும் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மதுரை- தேனி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவலறிந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து  உரிய அனுமதி பெறாமல் எந்தவொரு போராட்டங்களும் நடத்தக்கூடாது என எச்சரித்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற 5 பேரையும் போலீஸார் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments