FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுரை மாநகராட்சி பொறியாளர் இடமாற்றம்: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் கால அவகாசம்

மதுரை மாநகராட்சி நகரப் பொறியாளர்  தனது பணியிட மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய மனுவுக்கு அரசுத்தரப்பு பதிலளிக்க

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

மதுரை மாநகராட்சி நகரப் பொறியாளர்  தனது பணியிட மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய மனுவுக்கு அரசுத்தரப்பு பதிலளிக்க கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
   மதுரை மாநகராட்சி நகரப் பொறியாளராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர் அ.மதுரம். இந்நிலையில் நகரப் பொறியாளர் மதுரத்தை தூத்துக்குடி மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்து, சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைச் செயலர் ஹர்மந்தர்சிங் உத்தரவிட்டுள்ளார். இந்த மாறுதல் உத்தரவை எதிர்த்து மதுரம் தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல்  செய்யப்பட்டது. 
   அதில், அயல் பணி அடிப்படையில் எனக்கு இடமாறுதல் வழங்க விதிகள் இல்லை. என் தகுதிக்கு குறைவானவரை எனது பணியிடத்தில் நியமித்துள்ளனர். எனக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்து, மதுரை மாநகராட்சி நகர பொறியாளராகவே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
    இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு புதன்கிழமை விசாரணை வந்தது. விசாரணையின்போது, அரசுத் தரப்பில் கூடுதல் விளக்கமளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments