FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் தலைமையில் சைக்கிள் பேரணி

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி ஜெ. பேரவை சார்பில் ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை கள்ளிக்குடியில் நடைபெற்றது. 

Updated On : 31 டிசம்பர் 2018, 8:52 am IST
பகிர்:

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி ஜெ. பேரவை சார்பில் ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை கள்ளிக்குடியில் நடைபெற்றது. 
திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கள்ளிக்குடி ஒன்றியத்தில் ஜெ. பேரவை மாநிலச் செயலரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான 
ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சைக்கிள் பிரச்சார பேரணி நடைபெற்றது. 
திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டையில் தொடங்கிய இப்பேரணி கள்ளிக்குடி, சமத்துவபுரம், அரசபட்டி, கொக்குளம் உள்ளிட்ட 20 கிராமங்கள் வழியாக சென்று மீண்டும் சிவரக்கோட்டையில் நிறைவடைந்தது.   பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது:    
அரசின் சாதனை விளக்கங்களை கூறும் சைக்கிள் பேரணி முதன் முதலாக மதுரை பாண்டி கோயிலில் தொடங்கி அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. 
திமுக தற்போது பலவீனமாக உள்ளது. அதற்காக கிராமசபை கூட்டம் நடத்துகிறார்கள். திமுகவில் தற்போது சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை முன்னிலைப்படுத்துவதால் அந்தக் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர். 
மத்திய அரசிடமிருந்து தேவையான நிதிகளைப் பெறவே அமைச்சர்கள் புதுதில்லி சென்று வந்தனர். கூட்டணி குறித்தெல்லாம் மூத்த தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments