FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கெடுப்பு

மதுரையில் செல்லிடப் பேசி செயலியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On : 7 ஜூன் 2018, 8:13 am IST
பகிர்:

மதுரையில் செல்லிடப் பேசி செயலியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. 
     தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு இயந்திரங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரத்தின்  வாக்குப்பதிவு பிரிவு (பேலட் யூனிட்), கட்டுப்பாட்டு பிரிவு (கன்ட்ரோல் யூனிட்) ஆகியவற்றின்  வரிசை எண் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.
   மதுரை மாவட்டத்தில் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டன. இதில் வாக்குப்பதிவு பிரிவு, உத்தரபிரதேச மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. 1940 கட்டுப்பாட்டு பிரிவு இயந்திரங்கள் மட்டும் மாநகராட்சி அலுவலகத்தில்  உள்ளன.  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் உள்ள இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு,  தேர்தல் ஆணையத்தின் செயலியில் வரிசையில் ஸ்கேன் செய்து பதிவு செய்யப்பட்டன.    மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் இப் பணியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உதவி ஆணையர் பழனிசாமி, தேர்தல் வட்டாட்சியர் உதயசங்கர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சங்கரன் (அதிமுக), பழனிசாமி (திமுக), பூபதி (தேமுதிக),  மாயாண்டி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சரவணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி),  தவமணி (திரிணமூல் காங்கிரஸ்), சுந்தரராஜன் (தேசியவாத காங்கிரஸ்)  ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments