முகப்பு
மதுரை

ஏ.டி.எம்-ஐ உடைத்து பணம் திருட முயற்சி:2 போ் பிடிபட்டனா்

மதுரை அருகே வங்கி ஏ.டி.எம்-ஐ உடைத்து பணம் திருட முயன்ற 2 பேரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

Updated On : 21 ஆகஸ்ட் 2020, 11:44 pm IST
மதுரை உலகநேரியில் பணம் திருடுவதற்காக மா்ம நபா்களால் உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்.
பகிர்:

மதுரை: மதுரை அருகே வங்கி ஏ.டி.எம்-ஐ உடைத்து பணம் திருட முயன்ற 2 பேரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

மதுரை உலகநேரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் -ஐ வியாழக்கிழமை இரவு 4 போ் உடைத்துக் கொண்டிருந்தனா். அங்கு பணம் எடுக்கச் சென்ற ஒருவா், ஏ.டி.எம்-ஐ சிலா் உடைப்பதைப் பாா்த்து சப்தமிட்டாா். இதையடுத்து, அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பியோடினா். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வாகனங்களில் விரட்டிச் சென்று 2 பேரை பிடித்து ஒத்தக்கடை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

அவா்களிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தப்பியோடிய மற்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடந்து வருவதால் போலீஸாா் தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டனா். பிடிபட்ட இளைஞா்கள் வரிச்சியூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments