FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர்!

நடிகர் தேவன் பாஜகவில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளது குறித்து...

நடிகர் தேவன் - கோப்புப் படம்
பகிர்:

நடிகர் தேவன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் தேவன் பாஜக உறுப்பினர் பதவியிலிருந்தும், மாநிலத் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள கனிச்சுகுளங்கரா தேவி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

பாஜகவில் இருந்து விலகுவதற்காக விலகல் கடிதத்தைத் தயார் செய்துவிட்டதாகவும், அதை விரைவில் மாநிலத் தலைமையிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொலைநோக்குப் பார்வைகளின் அடிப்படையில் தனது அரசியல் செயல்பாடுகள் அமைந்திருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். மேலும், கடந்த தேர்தலில் தான் சில சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.

தேவன் 2004-ல் நவகேரள மக்கள் கட்சி (Navakerala People's Party) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். பின்னர் அதனை பாஜகவுடன் இணைத்தார்.

கேரளத்தில் நிலவும் வளர்ச்சிப் பற்றாக்குறையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காகவே இக்கட்சியைத் தொடங்கியதாகவும், மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே பாஜகவுடன் இணைவது என முடிவெடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், 2004-ல் நடைபெற்ற வடக்கஞ்சேரி இடைத்தேர்தலில் அவர் தனது சொந்தக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Actor Devan has announced his resignation from the BJP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments