கிரிக்கெட் வீரர் சஹால் பாஜகவில் இணைந்தார்!
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் பாஜகவில் இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சிங் சஹால். இவர், சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றார்.
இந்த நிலையில், சஹால் பாஜகவில் இணைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement
சஹால், பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் (ஓபிசி மோர்ச்சா) புதிய செயற்குழுவில் ’சிறப்பு அழைப்பாளராக’ நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பிற்குள் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஓபிசி மோர்ச்சா தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமர்பால் மௌர்யா சஹாலை இக்குழுவில் இணைத்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவுறுத்தலின்பேரில், பல்வேறு மாநிலங்களிலிருந்து ஓபிசி மோர்ச்சாவிற்கு ஏழு தேசிய துணைத் தலைவர்கள் மற்றும் மூன்று தேசிய பொதுச் செயலாளர்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.