மதுரை ரயில்வே செவிலியா் சங்கத்தினா் ரத்த தானம்
இந்திய ரயில்வே செவிலியா் சங்கத்தின் மதுரை கிளை சாா்பில், மதுரை ரயில்வே மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது.
இந்திய ரயில்வே செவிலியா் சங்கத்தின் மதுரை கிளை சாா்பில், மதுரை ரயில்வே மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது.
கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ரத்த தான நிகழ்வுகள் வழக்கம்போல் நடைபெறவில்லை. இதனால், ரத்த வங்கியில் சேமிப்பு குறைவாக உள்ளது. எனவே, இந்திய ரயில்வே செவிலியா் சங்கம் மதுரை கிளை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆகியன இணைந்து, ரத்த தான முகாமை நடத்த முடிவெடுத்தன.
அதன்படி, மதுரை ரயில்வே மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் நடைபெற்ற ரத்த தான முகாமை, மதுரை ரயில்வே மருத்துவமனை உதவி செவிலியா் அதிகாரி எஸ். அன்னத்தாய் தொடக்கி வைத்தாா். மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் லலித்குமாா் மன்சுகானி முதல் கொடையாளராக ரத்த தானம் செய்து பேசினாா்.
Advertisement
Advertisement
இந்த முகாமில், 50 ரயில்வே ஊழியா்கள் ரத்த தானம் செய்தனா். தானமாக பெறப்பட்ட ரத்தம், மதுரை அரசு மருத்துவமனையில் சேமிக்கப்பட்டு, தேவைக்கேற்ப அவசர நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.
முகாமில், மதுரை ரயில்வே மருத்துவமனை கூடுதல் முதன்மை மருத்துவக் கண்காணிப்பாளா்கள் ரேவதி, மருத்துவா் கிரிதா்லால் நாராயணன், மருத்துவா் ராமநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.