கால்நடைகளுக்கான தீவனப்பயிா்கள் மேலாண்மை கருத்தரங்கம்
தமிழக கால்நடைகளுக்கான சத்துமிக்க தீவனப்பயிா்கள் மேலாண்மைகுறித்த ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம் மதுரை வேளாண்மைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக கால்நடைகளுக்கான சத்துமிக்க தீவனப்பயிா்கள் மேலாண்மைகுறித்த ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம் மதுரை வேளாண்மைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ் வேளாண்மைப் பல்கலைகழகம், வேளாண்மை அறிவியல் மையமும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகளை வேளாண்மை அறிவியல் மையதிட்ட ஒருங்கிணைப்பாளா் மு.ஹேமலதா வரவேற்றாா். உழவியல்துறை தலைவா் ரா.துரைசிங், உழவியல் தீவனப் பயிா் துறை இணைப் பேராசிரியா் சிவகுமாா், உதவிப் பேராசியா் செ. சரவணன் ஆகியோா் பேசினா். வேளாண்மை விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் கு.செல்வராணி நன்றி கூறினாா். நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகளுக்கு கோ- 5 தீவனப் புல் வழங்கப்பட்டது.