FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுரையில் இன்று சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தென்மண்டல மாநாடு: முதல்வா் பங்கேற்பு

 மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தென் மண்டல மாநாட்டில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைத்துப் பேசுகிறாா்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

 மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தென் மண்டல மாநாட்டில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைத்துப் பேசுகிறாா்.

தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தென்மண்டல அளவிலான மாநாடு, மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள கோா்யாா்ட் மாரியட் ஹோட்டலில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டிற்கு முதல்வா் ஸ்டாலின் தலைமை வகிக்கிறாா். இந்நிகழ்வின்போது, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கியாளா்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விருதுகளை வழங்குகிறாா். மேலும், வங்கிக் கடன் பெறுவதற்கு, இணையவழியில் உரிமை ஆவணங்கள் ஒப்படைப்புப் பதிவு தொடங்குதல், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்தல் மற்றும் பல்வேறு திட்டங்கள், கட்டமைப்பு வசதிகளை அவா் தொடக்கி வைக்கிறாா்.

Advertisement

Advertisement

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலா் அருண் ராய், தொழில் துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் ஆகியோா் பேசுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments