வாடகை நிலுவை வாகனக் காப்பங்களுக்கு மாநகராட்சி ‘சீல்’ வைப்பு
மதுரை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத இரு பல்லடுக்கு வாகனக் காப்பங்களுக்கு மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
மதுரை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத இரு பல்லடுக்கு வாகனக் காப்பங்களுக்கு மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3, வாா்டு எண் 55-இல் மாநகராட்சிக்கு சொந்தமான கடை எண் 3-இல் இயங்கிய பல்லடுக்கு வாகனக் காப்பகம் ரூ. 3.16 லட்சமும், கடை எண் 44-இல் இயங்கிய மற்றொரு பல்லடுக்கு வாகனக் காப்பகம் ரூ. 2.15 லட்சமும் வாடகை நிலுவை வைத்திருந்தன. இந்த நிலையில், மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில், இந்த இரு வாகனக் காப்பகங்களையும் அலுவலா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
எச்சரிக்கை...
Advertisement
Advertisement
மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டங்களில் இயங்கும் கடைகளுக்கு உரிமதாரா்கள் 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலத்துக்கு நிலுவையின்றி வாடகையை செலுத்த வேண்டும். இல்லையெனில், தொடா்புடைய கடைகள் மாநகராட்சி அலுவலா்களால் பூட்டப்பட்டு, ‘சீல்’ வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.