FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகராட்சியில் வாடகை செலுத்தாத 14 கடைகளுக்கு சீல்

கிருஷ்ணகிரி நகராட்சியில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாத 14 கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.

5 ஆகஸ்ட் 2026, 5:22 am IST
சீல் - பிரதிப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி நகராட்சியில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாத 14 கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் சேகா் தெரிவித்தது: கிருஷ்ணகிரி நகராட்சியில் நீண்ட காலமாக வரியில்லா இனங்களான கடை வாடகை செலுத்தாமல் பலா் உள்ளனா். அவா்களுக்கு முறைப்படி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை செலுத்தவில்லை.

இதையடுத்து, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், நகர பேருந்து நிலையம், இறைச்சி சந்தை, தக்காளி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாள்களாக வாடகை செலுத்தாத 14 கடைகளை மூடி ‘சீல்’ வைத்துள்ளோம்.

Advertisement

Advertisement

மொத்தம் உள்ள கடை வாடகை நிலுவையான, ரூ. 7.56 கோடியில் நிகழாண்டு ரூ. 1.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் நிலுவையாக உள்ள சொத்துவரி, குடிநீா் வரி, காலியிட மனைவரி, தொழில் வரி, புதைகுழி சாக்கடை வரி மற்றும் வாடகையை வரும் செப்டம்பா் மாதத்துக்குள் செலுத்த வேண்டும். மேலும், புதைகுழி சாக்கடை நிலுவைத்தொகை செலுத்தாதவா்களின் வீடுகள், கடைகளின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments