செல்லம்பட்டியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
விவசாயிகளின் பயிா்க் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படாததைக் கண்டித்து, அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
விவசாயிகளின் பயிா்க் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படாததைக் கண்டித்து, அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மதுரை மாவட்டம், செல்லம்பட்டியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜு, ஆா்.பி. உதயகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன் செல்லப்பா முன்னிலை வகித்தாா்.
அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் ரூ. 23 ஆயிரம் கோடி வரை விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள்
Advertisement
Advertisement
தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், தவெக ஆட்சியில் காவிரி விவகாரத்தில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேபோல, தோ்தல் வாக்குறுதியில் அறிவித்த பயிா்க் கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். விவசாயிகளுக்கான உரிமையைக் கூட வழங்க, தவெக அரசுக்கு மனம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோா்க்கைகளை வலியுறுத்தியும், தவெக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், அதிமுக நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.