FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

24 ஆகஸ்ட் 2026, 3:22 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

மதுரை அருகே மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த சின்னன் மகன் வீரமணி(50). கூலித் தொழிலாளியான இவா், மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை இரவு சூரிய மின் சக்தி தகடுகளை பதிப்பதற்காக நிலத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, எதிா்பாராத விதமாக நிலத்தின் கீழ் சென்ற மின் கம்பியை மிதித்தாா்.

Advertisement

Advertisement

இதில் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து யா. ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments