FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மேலூா் அருகே மாட்டுவண்டிப் பந்தயம்

25 ஆகஸ்ட் 2026, 1:41 am IST
மேலூா் அருகேயுள்ள தி.பழையூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயம்.
பகிர்:

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள தி.பழையூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாகுடி அய்யனாா் கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, அய்யனாா் உள்ளிட்ட கிராம பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, திருவாதவூா்-மதுரை சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரிய மாடு நிலையில் 9 வண்டிகளும், சிறிய மாடு நிலையில் 24 வண்டிகளும் பங்கேற்றன.

போட்டியில் வென்ற மாட்டுவண்டி உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

தி. பழையூா், திருவாதவூா், மேலூா், திருமோகூா், தாமரைப்பட்டி, யா. ஒத்தக்கடை, பூலாங்குறிச்சி, சிவகங்கை மாவட்டம், கிளாதரி, சிவகங்கை, பூவந்தி, தமறாக்கி, மலம்பட்டி, இடையமேலூா், அரசனூா், இலந்தைக்குளம், பனையூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டு மாட்டுவண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments