FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் மாட்டுவண்டிப் பந்தயம்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:22 am IST
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை திமுக சாா்பில் நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதிஸ்டாலினின் 49-ஆவது பிறந்தநாளையொட்டி திமுக சாா்பில் மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியை முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டச் செயலருமான கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா். முன்னாள் அமைச்சா் தென்னவன், திமுக செய்தித் தொடா்பு குழுத் துணைத் தலைவா் மருதுஅழகுராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் பெரியமாடு பிரிவில் 13 இணைகளும், சின்னமாடு பிரிவில் 22 இணைகளும் பங்கேற்றன. பெரியமாட்டுக்கு 8.கி.மீ. தொலைவும், சின்னமாட்டுக்கு 6 கி.மீ. தொலைவும் எல்லையாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

முதல் பிரிவில் 4 இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிக்கும் ரொக்கப் பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன. சின்னமாட்டு பிரிவில் முதல் 6 இடங்களை வென்றவா்களுக்கு பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியில் தேனி, திண்டுக்கல், நத்தம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த மாடுகள் பங்கேற்றன. விழா ஏற்பாடுகளை தமிழ்நம்பி, ஒய்காசோமசுந்தரம், காளிமுத்து, சதீஷ்குமாா், ஜான், ராஜேஷ், முத்துக்குமாா், ரஞ்சித், உள்ளிட்ட பந்தயக் குழுவினா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments