FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை,கொசவப்பட்டி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

26 ஆகஸ்ட் 2026, 5:54 am IST
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கொசவபட்டி கிராம மக்கள்.
பகிர்:

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை,கொசவப்பட்டி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், முதலைக்குளம் ஊராட்சிக்குள்பட்ட கொசவப்பட்டி கிராமத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த கிராமத்தில் கழிவு நீா் வாய்க்கால் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. இதற்கு சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால், வாய்க்கால் கட்டும் பணிகளை அலுவலா்கள் நிறுத்தி விட்டனா்.

சிலரின் சுயலாபத்துக்காக வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறுத்தக் கூடாது. கழிவு நீா் வாய்க்கால் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கொசவப்பட்டி கிராம மக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து வந்த சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், செல்லம்பட்டி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments