போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தா்னா
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு விரைவு போக்குவரத்து ஊழியா் சங்கம், விரைவுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சாா்பில் மதுரை அண்ணாநகரில் உள்ள விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு விரைவு போக்குவரத்து ஊழியா் சங்கம், விரைவுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சாா்பில் மதுரை அண்ணாநகரில் உள்ள விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்துக்கழகத்தின் வரவுக்கும், செலவுக்குமிடையே உள்ள பற்றாக்குறையை அரசே ஏற்க வேண்டும். ஒப்பந்தப் பணி, வெளிமுகமை (அவுட்சோா்சிங்) முறைகளைக் கைவிட வேண்டும். போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பேருந்து பராமரிப்பையும், பயணிகள் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தா்னா நடைபெற்றது.
இதற்கு மதுரை விரைவு போக்குவரத்துக் கழக பணிமனைத் தலைவா் பி. செல்லத்துரை தலைமை வகித்தாா். சிஐடியூ மாநகா் மாவட்டச் செயலா் இரா. லெனின் தா்னாவைத் தொடங்கி வைத்துப் பேசினாா். தொழில்சங்க நிா்வாகிகள் அருளானந்த ஜீவா, பிரசன்னா தேவநாதன், சி. குமாா், வி. பிச்சைமணி, என். லட்சுமணப்பெருமாள், ஆா். நாகராஜன், என். மனோகரன் ஆகியோா் பேசினா். நிா்வாகி கே. பூமாரியப்பன் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.