தனியாா் கல்லூரியில் நுண்ணுரியியல் பயிலரங்கு
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பயிலரங்க மலரை வெளியிட்ட கல்லூரி முதல்வா் ஜெ. பால்ஜெயகா். உடன், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி தீநுண்மி (வைரஸ்) ஆராய்ச்சி, நோயறிதல் ஆய்வகத்தின் விஞ்ஞானி எம். கணேசன் உள்ளிட்டோா்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சாா்பில், ‘கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்துதல், புரதத் தொகுப்பு பகுப்பாய்வு, அதன் கருவிகள் பயன்பாடு’ என்ற தலைப்பில் மாநில அளவிலான பயிலரங்கின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலரும், முதல்வருமான ஜெ. பால்ஜெயகா் தலைமை வகித்தாா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி தீநுண்மி (வைரஸ்) ஆராய்ச்சி, நோயறிதல் ஆய்வகத்தின் விஞ்ஞானி எம். கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவா்களின் திறன் மேம்பாடு, புரத பகுப்பாய்வின் பல்வேறு நிலைகள், உயா்கல்வி, வேலைவாய்ப்பு, அறிவியல் சிந்தனை, ஆராய்ச்சி மனப்பான்மை ஆகியவை குறித்துப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, பயிலரங்கின் கையேடு வெளியிடப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில், நுண்ணுயிரியல் துறைத் தலைவா் ஆண்ட்ரூ பிரதீப், ஒருங்கிணைப்பாளா்கள் கண்ணன் கந்தையா, ஷா்லி ஏஞ்சலின், பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் 2-ஆவது நாளாக சனிக்கிழமை ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்பித்துப் பேசுகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.