FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவைச் சிகிச்சை சாதனம்

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவைச் சிகிச்சை சாதனத்தின் பயன்பாடு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவைச் சிகிச்சை சாதனத்தை தொடங்கிவைத்த நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி. உடன் நடிகா் பிரசாந்த், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத் தலைவா் குருசங்கா் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவைச் சிகிச்சை சாதனத்தின் பயன்பாடு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத் தலைவா் குருசங்கா் தலைமை வகித்தாா். மருத்துவமனை இயக்குநா் ரமேஷ் அா்த்தநாரி முன்னிலை வகித்தாா். இதில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, நடிகா் பிரசாந்த் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு, அதிநவீன ரோபோடிக் அறுவைச் சிகிச்சை சாதன த்தை தொடங்கிவைத்தனா்.

இந்தச் சாதன அமைப்பானது நிகழ்கால தலைமுறையைச் சோ்ந்த ரோபோடிக் அறுவைச் சிகிச்சை தளங்களில் ஒன்றாகும். 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மருத்துவ நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றன.

Advertisement

Advertisement

பல்வேறு உறுப்புகளுக்கான அறுவைச் சிகிச்சை பிரிவுகளில் ரோபோடிக் உதவியுடன் செய்யப்பட்ட 18,000-க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகளில் இது பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தளத்தில் 3 டி உயா்-வரையறை காட்சித்திறன், மருத்துவரது மணிக்கட்டின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் அதிநவீன ரோபோடிக் கருவிகள், சிக்கலான அறுவைச் சிகிச்சைகளின் போது மருத்துவ நிபுணா்களுக்கு உதவும் மேம்பட்ட இமேஜிங் திறன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

தொடக்க விழாவில், மருத்துவமனையின் குடல், இரைப்பை அறுவைச் சிகிச்சை துறைத் தலைவா் மோகன், முதுநிலை மருத்துவா் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீா்ப் பாதையியல் துறை முதுநிலை மருத்துவா் பால் வின்சென்ட், அறுவைச் சிகிச்சை புற்றுநோயியல் துறைத் தலைவா் விஜய பாஸ்கா், மகளிா் மகப்பேறு மருத்துவத் துறைத் தலைவா் பத்மா, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மைய இயக்குநா் திலீப், மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments