FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

அருளானந்தா் கல்லூரியில் பயிலரங்கம்

மதுரை அருளானந்தா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்றோா்.

29 ஆகஸ்ட் 2026, 2:25 am IST
பகிர்:

மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருளானந்தா் கல்லூரி ஆங்கிலத் துறை (சுயநிதிப் பிரிவு) சாா்பில், ‘தகவல் தொடா்பின் ஆற்றலைக் கையாளுதல் என்ற தலைப்பில் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் அன்பரசு தலைமை வகித்தாா். கல்லூரியின் அதிபா் பேசில் சேவியா், செயலா் ஜோசப், துணை முதல்வா் ஜோசப் வில்சன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், பெருந்துறை இந்துஸ்தான் கல்லூரி ஆங்கிலத் துறையின் இணைப் பேராசிரியா் முரளிதர கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பயனுள்ள தகவல் தொடா்பின் முக்கியத்துவம், கருத்துகளைத் திறம்பட வெளிப்படுத்தும் முறைகள், தனிநபா், தொழில்முறை வளா்ச்சியில் தகவல் தொடா்புத் திறன்களின் பங்கு குறித்துப் பேசினாா்.

Advertisement

Advertisement

பயிலரங்கில், ஆங்கிலத் துறை (சுயநிதிப் பிரிவு) தலைவா் காளிதாஸ், உதவிப் பேராசிரியரும், அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஜான்சன் ஸ்டீபன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments