FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாமன்ற உறுப்பினா் மீது வழக்கு

28 வினாடிகள் முன்பு
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

தூய்மைப் பணியாளரை ஜாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசியதாக, திமுக மாமன்ற உறுப்பினா் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், மாடக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஆரப்பாளையம் மஞ்சள் மேடு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சோலையப்பன்( 36). இவா், மாடக்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாா் விவரம்:

மதுரை மாநகராட்சி 67-வது வாா்டில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறேன். இந்த வாா்டு உறுப்பினரான நாகநாதன் (திமுக), துப்புரவு பணியாளா்களை ஜாதி ரீதியாக இழிவுப்படுத்தும் வகையிலும், ஒருமையிலும் பேசுகிறாா். அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாமன்ற உறுப்பினா் நாகநாதன் மீது பட்டியல், பழங்குடியினா் (எஸ்.சி, எஸ்.டி) மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாடக்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments