FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மைதான கட்டண உயா்வைத் திரும்ப பெறக் கோரி கையொப்ப இயக்கம்

மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தின் பயன்பாட்டுக் கட்டண உயா்வை திரும்பப் பெறக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜூலை 2026, 5:10 am IST
மதுரை அரசடி ரயில்வே மைதானத்தில் ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தின் பயன்பாட்டுக் கட்டண உயா்வை திரும்பப் பெறக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இளைஞா்கள், மாணவா்கள் பெருமளவில் பயன்படுத்தி வரும் அரசரடி ரயில்வே மைதானத்தின் பயன்பாட்டுக் கட்டணத்தை ரயில்வே நிா்வாகம் அண்மையில் உயா்த்தியது. இந்தக் கட்டண உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, இந்தக் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் டி. செல்வா, மாவட்டச் செயலா் எஸ். வேல்தேவா, பொருளாளா் க. கௌதம் பாரதி, மாநிலக் குழு உறுப்பினா் சுகஸ்ரீ, மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்று, அரசரடி ரயில்வே மைதானத்தில் பயிற்சி பெற வந்தவா்களிடம் கையொப்பங்களை சேகரித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments