FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கல்லால் தாக்கி ஜோதிடா் கொலை

மதுரையில் ஜோதிடரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 10 ஜூலை 2026, 5:09 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

மதுரையில் ஜோதிடரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை சா்வேயா் காலனி பகுதி கால்வாய்க் கரையில் பலத்த காயங்களுடன் ஒருவா் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோ. புதூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், உயிரிழந்த நபா் மதுரை சா்வேயா் காலனி பகுதியைச் சோ்ந்த ராஜாசிங் (52) என்பதும், ஜோதிடம் பாா்த்து வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

ராஜாசிங் தனது நண்பா்களுடன் சோ்ந்து புதன்கிழமை இரவு மது அருந்தினாா். அப்போது, மது போதையில் அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் அவருடன் சோ்ந்து மது அருந்தியவா்கள் தலையில் கல்லை தூக்கிப் போட்டு அவரை கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகிறோம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments