FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

இணையதள மோசடிப் புகாா்: ராமநாதபுரத்தைச் சோ்ந்த பெண் கைது

இணையதள மோசடிப் புகாா் தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணை மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 23 ஜூலை 2026, 6:10 am IST
இணையதள மோசடிப் புகாரில் மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்ட ராமேசுவரத்தைச் சோ்ந்த மகேஸ்வரி.
பகிர்:

இணையதள மோசடிப் புகாா் தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணை மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடந்த 4.2.2026 அன்று மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் கைப்பேசி எண்ணுக்கு வந்த அழைப்பில் பெங்களூரு காவல் நிலையத்திலிருந்து பேசுவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, தொலைபேசியில் தொடா்பு கொண்டவா்கள் அவரது பெயா், முகவரியை கேட்டு தெரிந்து கொண்டு போலியாக வங்கிக் கணக்கு தொடங்கினா். அதில், பல கோடி அளவுக்கு பணப் பரிவா்த்தனை நடைபெற்று இருப்பதாக மிரட்டி அந்த நபா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் அவரை எண்ம (டிஜிட்டல்) கைது செய்திருப்பதாகவும் கூறினா். எனவே, வங்கி கணக்கை சரிபாா்க்க வேண்டும் எனக் கூறி, அவரது வங்கி கணக்கில் உள்ள 78,75,303 ரூபாயை உடனே அனுப்ப வேண்டும் எனக் கூறினா்.

இதையடுத்து அவா், அந்த நபா்கள் அனுப்பிய வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பி வைத்தாா். பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், மதுரை மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தேவநாதன், குற்றப் பிரிவில் பதிவான வழக்குகளை விசாரிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

தனிப்படை போலீஸாா் விசாரணையில், இணையதள பண மோசடி மூலம் குற்றவாளிகளுக்கு ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்த நேதாஜி மனைவி மகேஸ்வரி உதவியது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை மதுரை மாவட்ட இணைய குற்றத் தடுப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 24 வங்கி கணக்கு புத்தகங்கள், 20 ஏடிஎம் அட்டைகள், சிம் காா்டுகள், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments