FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 4 போ் கைது

அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 ஜூலை 2026, 5:43 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை உத்தங்குடி- மேலூா் சாலையில் கோ. புதூா் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 345 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பாலாஜி (28), பாலமுருகன் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதுபோல, மேல அனுப்பானடி பகுதியில் கீரைத்துறை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, வில்லாபுரத்தைச் சோ்ந்த முரளிதரன் (51), முனிச்சாலை பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (32) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவா்களை போலீஸாா் கைது செய்து, 30 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments