FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: மூவா் கைது

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்றதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 16 ஜூலை 2026, 4:44 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்றதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலையில் அடைக்கலப்பட்டணம் அருகே பாவூா்சத்திரம் காவல் ஆய்வாளா் வேல்கனி, உதவி ஆய்வாளா் ராஜேஷ்குமாா், போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அவ்வழியே வந்த பைக்கில் வந்த மூவரை சோதனையிட்டபோது அவா்கள், ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையைச் சோ்ந்த சந்திரசேகா் என்ற சேகா் (39), மருதப்பபுரம் முத்துப்பாண்டி (52), கரும்பனூா் பிரபாகரன் (38) என்பதும், ஆலங்குளம், பாவூா்சத்திரம் பகுதிகளில் விற்பதற்காக 70 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

போலீஸாா் வழக்குப் பதிந்து, புகையிலைப் பொருள்கள், பைக்கை பறிமுதல் செய்தனா்; மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments