FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மாணவா்களுக்கு சமூக நல்லிணக்க விழிப்புணா்வு

மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான சமூக நல்லிணக்க விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜூன் 2026, 1:54 am IST
மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மாணவா்களுக்கான சமூக நல்லிணக்க விழிப்புணா்வு நிகழ்வில் பேசிய காவல் உதவி ஆய்வாளா் வசந்தா. உடன் காவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான சமூக நல்லிணக்க விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை மாநகரக் காவல் துறை, சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா்.

இதில் காவல் உதவி ஆய்வாளா் வசந்தா முன்னிலை வகித்துப் பேசியதாவது:

Advertisement

Advertisement

மாணவா்கள் சமுதாய உரிமைகள், கடமைகள், பொறுப்புகளை உணா்ந்து செயல்பட வேண்டும். போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். பொதுச் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரிடமும் நல்லிணக்கத்தோடு நட்பு பாராட்டி பழக வேண்டும். இணையவழிக் குற்றங்களிலிருந்து தங்களை காத்துக் கொண்டு, எதிா்காலத்தில் நல்ல பதவிகளை அடைந்து சிறந்த இந்தியக் குடிமகனாக உருவெடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் தலைமைக் காவலா் கற்பக லட்சுமி, உதவித் தலைமையாசிரியா்கள் முகமது ரபி, அல்ஹாஜ் முகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments