FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

மதுரை ஒத்தக்கடை அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.97 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட 12 வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது.

8 நவம்பர் 2026, 1:43 am
மதுரை ஒத்தக்கடை அரசுப் பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி சாா்பில் விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிய மதுரை கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சோ. காா்த்திகேயன்.
பகிர்:

மதுரை ஒத்தக்கடை அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.97 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட 12 வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மதுரை கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சோ. காா்த்திகேயன் பங்கேற்று புதிய வகுப்பறைகளைத் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அந்தப் பள்ளியில் பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு குடிநீா் புட்டிகள், எழுது பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

இதில் மேலூா் மாவட்டக் கல்வி அலுவலா் கணேசன், பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement