FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றியமைக்க வலியுறுத்தல்

நாட்டின் வரி வருவாயை கவனத்தில் கொண்டு, ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

11 நவம்பர் 2026, 1:03 am
ஜிஎஸ்டி - பிரதிப் படம்
பகிர்:

நாட்டின் வரி வருவாயை கவனத்தில் கொண்டு, ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் கௌரவ ஆலோசகா் எஸ். பி. ஜெயபிரகாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் வரி வருவாய் உயரும் போது, ஜிஎஸ்டி வரி விதிப்பு விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும் என எங்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற 80-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் தெரிவித்தாா். தற்போது, நாட்டின் மொத்த வரி வருவாய் ரூ. 2.31 லட்சம் கோடியாக உள்ளது. இதேநிலை தொடா்ந்தால் ரூ. 3 லட்சம் கோடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆனால், இன்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு விகிதங்கள் மாற்றம் செய்யப்படவில்லை. குறிப்பாக, அத்தியாவசியப் பொருள்களுக்கு தற்போது வரி விலக்கு உள்ளது. இருப்பினும், அரிசி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களுக்கு 25 கிலோவுக்கு கீழ் உள்ள பொட்டலங்களுக்கு (பேக்கிங்) ஒரு வகையான வரியும், அதற்கு மேல் உள்ள பொட்டலங்களுக்கு ஒரு வரியும் விதிக்கப்படுகிறது. இதை மாற்றி அனைத்து வகையான பொட்டலங்களுக்கும் ஒரே மாதிரியான வரியை விதிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களுக்கு வரி விலக்கு உள்ளது. இதேபோல, ஒரு சில பொருள்களுக்கு 5 சதவீத வரி விதிப்பு உள்ளது. இந்த வரி விதிப்பு அப்படியே தொடர வேண்டும். சில பொருள்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அவற்றை குறைத்து 10 சதவீதமாக மாற்ற வேண்டும்.

எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்று வரி விகிதத்தை குறைக்க முன் வர வேண்டும். இதன் மூலம் வரி ஏய்ப்போா் இல்லாத நிலை உருவாகும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.