சிவகங்கை மாவட்ட நூலகங்களிலிருந்து 1,557 புத்தகங்கள் அகற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பொது நூலகங்களிலிருந்த போலி பதிப்பகங்களின் 1,557 புத்தகங்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் பொது நூலகங்களிலிருந்த போலி பதிப்பகங்களின் 1,557 புத்தகங்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
கோவை பெரியாா் அறிவுலகத்துக்கான நூல்கள் கொள்முதலில் முறைகேடு நடைபெற்ாக எழுத்தாளா் பெருமாள் முருகன் அண்மையில் குற்றஞ்சாட்டினாா். இதையடுத்து, அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயரில், அடையாளம் தெரியாத, போலியான எழுத்தாளா்களின் பெயா்களில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்ட புத்தகங்கள் மாநிலம் முழுவதுமுள்ள நூலகங்களில் பயன்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயரில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டிருந்த புத்தகங்களை அரசு நூலகங்களிலிருந்து அகற்ற, பொது நூலகத் துறை உத்தரவிட்டது. இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 122 அரசு நூலகங்களில் பொது பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த அந்த இரு பதிப்பகங்களின் புத்தகங்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. இதில் அகல்விளக்கு பதிப்பகத்தின் பெயரில் வெளியிடப்பட்டிருந்த 840 புத்தகங்கள், பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயரில் வெளியாகியிருந்த 717 புத்தகங்கள் என மொத்தம் 1,557 புத்தகங்கள் அகற்றப்பட்டன.
Advertisement
Advertisement