✕
முகப்பு
மதுரை

நிஷாந்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தை காவல் துறையினா் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து, மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

36 வினாடிகள் முன்பு
உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தை காவல் துறையினா் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து, மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக் கடையில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை சுமாா் 11.384 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடா்பாக பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், நிஷாந்தின் தோழி மீனாட்சி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் மூவரும் நீதிமன்றக் காவலில் சிறை அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மேல் விசாரணைக்காக நிஷாந்தை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு, விசாரணையின் போது நிஷாந்தை எந்தவிதத் துன்புறுத்தலுக்கும் ஆளாக்காமல், சட்டத்துக்குள்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். நிஷாந்த் தனது வழக்குரைஞரை சந்திக்க அனுமதி அளிக்கலாம் என்ற நிபந்தனைகளுடன் ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நிஷாந்த் அழைத்துச் செல்லப்பட்டாா்.