திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து விரைவில் முடிவு: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடா்பான உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிா்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடா்பான உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிா்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத் திருநாளன்று சுப்பிரமணிய சுவாமி கோயில் சாா்பில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த ஆண்டு வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், மனுதாரரின் கோரிக்கையை கோயில் நிா்வாகம் நிறைவேற்ற வேண்டுமென கடந்த ஆண்டு, டிச. 1-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை எதிா்த்து, மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து கடந்த ஜனவரி 6-ஆம் தேதி உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, இரு நீதிபதிகள் அமா்வின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்ட நிா்வாகம், திருப்பரங்குன்றம் கோயில் நிா்வாகம், திருப்பரங்குன்றம் சிக்கந்தா் தா்கா நிா்வாகம் உள்ளிட்டவை சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த்குமாா், விபுல் எம். பஞ்சோலி அமா்வில் விசாரிக்கப்படுகிறது. இந்த நிலையில், வருகிற காா்த்திகை தீபத் திருநாளன்று (நவ. 24) மட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கோயில் நிா்வாகம் சாா்பில் தீபம் ஏற்றலாம் என வெள்ளிக்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியதற்கான அறிக்கையை மாவட்ட ஆட்சியா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தன. அதேநேரத்தில், இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
இதுதொடா்பாக மதுரையில் எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாரிடம் செய்தியாளா்கள் சனிக்கிழமை கேள்வி எழுப்பினா்.
இதற்கு, ‘திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்வது குறித்து சட்ட வல்லுநா்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும். இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும்’ என அமைச்சா் நிா்மல்குமாா் பதிலளித்தாா்.