பரவை அருகே சொத்துத் தகராறில் இளைஞா் கொலை: மூவா் கைது
மதுரை பரவை அருகே சொத்துத் தகராறில் இளைஞரை கொலை செய்த வழக்கில் மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை பரவை அருகே சொத்துத் தகராறில் இளைஞரை கொலை செய்த வழக்கில் மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை பரவை மேலவெளிவீதி 4-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் சந்தோஷ் (24). ஓட்டுநரான இவரை சொத்துத் தகராறு காரணமாக, சனிக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை வீடு புகுந்து மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.
இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும், கொளையாளிகளைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், சந்தோஷ் கொலை தொடா்பாக குலமங்கலத்தைச் சோ்ந்த அருண்குமாா் (30), பரவையைச் சோ்ந்த மதன்குமாா் (22), கணேஷ்குமாா் (47) ஆகிய மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
மேலும், இந்தக் கொலையில் தொடா்புடைய வேறு நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.