மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 89 பூங்காக்களையும் டிச. 7-க்குள் தூய்மைப்படுத்த உத்தரவு
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 89 பூங்காக்களையும் வருகிற டிச. 7-ஆம் தேதிக்குள் தூய்மைப்படுத்த வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 89 பூங்காக்களையும் வருகிற டிச. 7-ஆம் தேதிக்குள் தூய்மைப்படுத்த வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த ஆறுமுகம் தாக்கல் செய்த மனு:
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் பல்வேறு பூங்காக்கள் உள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படாததால் இவற்றை முழுமையாக பொதுமக்களால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை முறையாகப் பராமரிக்கும் வகையில், போதுமான பணியாளா்களை நியமிக்கவும், தேவையான தண்ணீா் விநியோகம் செய்யவும், இருக்கைகள், பிற உள்கட்டமைப்பு வசதிகளை செய்யவும், மாநகராட்சியின் ஒவ்வொரு வாா்டிலும் ஒரு பூங்கா இருப்பதை உறுதி செய்யவும் கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
Advertisement
Advertisement
எனவே, பூங்காக்களை பராமரிக்கவும், புதிய பூங்காக்களை ஏற்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் எத்தனை பூங்காக்கள் உள்ளன?. அவை சுத்தமாக பராமரிக்கப்படுகின்றனவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
இதற்கு அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் 89 பூங்காக்கள் உள்ளன. இவற்றை சுத்தமாக பராமரிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 89 பூங்காக்களையும் வருகிற டிசம்பா் 7-ஆம் தேதிக்குள் தூய்மைப்படுத்த வேண்டும். பூங்காக்களை தூய்மைப்படுத்தியதற்கான விடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் மதுரை மாநகராட்சி ஆணையா் சமா்ப்பிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற டிச. 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.